Tuesday 31 October 2017

சிரிப்பு

உன் சிரிப்பலையில் மயங்கி
தான் இசைக்கவே மறந்ததை
என் காதோறம் கிசுகிசுத்து சென்றது
குயில்களின் கூவல்...!

முகம் தெரியா நாயகன்


முகம் தெரியா உன்னை
முழுவதுமாய் நினைக்கத் தொடங்கி விட்டேன்
பெயர் அறியா உன் பெயரை
என் பெயரோடு இணைத்துக் கொள்ளத் துடித்தேன்
ஒட்டு மொத்த அன்பையும்
ஒன்று சேர்த்து வைத்திருக்கிறேன்;
வாங்கிக் கொள்ள
நீ எப்பொழுது வருவாய்...?

தாய்

உன் வலியால் பிறந்ததால் தானோ என்னவோ
எனக்கு வலி வரும்போதெல்லாம்
உன்னையே அழைக்கின்றன என் உதடுகள்...!

Thursday 19 October 2017

தூய்மை




மாடி வீட்டு ஜன்னலில் தான்
எத்தனை அழுக்குகள்;
எதிர் வீட்டு குடிசையில் தான்
எத்தனை தூய்மை!

நட்பு

பூக்கள் மலர்வது உதிரத்தான் என்றால்,
நம் நட்பு
மொட்டாகவே இருக்கட்டும்!

அக்கா

தாயாகி தாலாட்ட வந்தாள்
தந்தையாகி பாதுகாக்க வந்தாள்
தோழமையில் எனையே வென்றாள்
துன்பத்தில் துணையாக வந்தாள்-வழியும்
கண்ணீரை துடைக்க வந்தாள்!
அன்பு மழையில் எனை முழுதும் நனைத்தாள்!
- அன்பு அக்காவின் குட்டி தங்கை

வானவில் வாழ்க்கை

அன்னை தந்தையே சந்திர சூரியன்
மேகங்களே உறவுகள்
நட்சத்திரங்களே நண்பர்கள்
மழையே மழலைகள்
இடியும் மின்னலுமே துன்பம்
வானவில்லே இன்பம்!
ஆம்...
வானமே வாழ்க்கைப் பயணம்...☺

Singles

மணிக்கணக்காய் முனுமுனு உரையாடல் பெற்றோருக்கு தெரியாமல் பெரிய பெரிய சந்திப்பு மனதிற்கு பிடித்தவரிடம் மறைக்கப்பட்ட பேச்சு இனிய தூக்கம...